தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், அமைச்சர் மனோ கணேசன் ஊடாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில், தமிழ் அரசியல் கைதிகளை, பார்வையிட்டுள்ளார்.
நேற்று காலை சிறைச்சாலைக்கு விஜயம் செய்து, அண்மையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். (சி)