கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஸ்டார் நெசவு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு அங்கத்துவ புத்தகம் மற்றும் சங்கத்திற்கான உத்தியோகபூர்வ பதிவு இலக்கம் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை பாண்டிருப்பு நெசவு நிலையக் கட்டடத்தில் நடைபெற்றது.
மட்டுப்படுத்தப்பட்ட ஸ்டார் நெசவு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.தோக்குபிள்ளை ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கலாதேவி உதயராஜ் உட்பட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் நெசவுதொழிலாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
கல்முனைப் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் நெசவுத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து இன நல்லுறவைப் பேணும் வகையில் நெசவு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இச் சங்கம் ஊடாக இன ஐக்கியம் வலுப்பெற வேண்டும் என கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கலாதேவி உதயராஜ் தெரிவித்தார்.(சி)