இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சு முறைமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 6 இலக்குகளை கைப்பற்றி அசத்திய, இலங்கை கிரிக்கெட் வீரர் அகில தனஞ்சயவின் சுழற்பந்து வீச்சு விதிமுறைகளை மீறியுள்ளதாக போட்டியின் நடுவர்களினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சனின் பந்து வீச்சும் சந்தேகத்திற்கிடமானது என நடுவர்களினால் முறையிடப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையிடம் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில், இரு அணிகளின் நிர்வாகத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நடுவர்கள் புகார் அளித்த நாளிலிருந்து 14 நாட்களுக்குள் வில்லியம்சன் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர், சர்வதேச கிரிக்கெட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பந்து வீச்சு சோதனை மையத்தில் தங்களின் பந்து வீச்சினை பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.
இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.(சே)