அமெரிக்கா ஏவுகணை பரிசோதனை நடாத்தியுள்ளதாக ரஸ்யா குற்றம் சுமத்தியுள்ளது.

தரையில் இருந்து ஏவப்படும் நடுத்தர தூர ஏவுகணை ஒன்றை அமெரிக்கா நேற்று முன்தினம் பரிசோதித்த நிலையில், இது இராணுவ பதற்றத்தை அதிகரிக்கும் என ரஸ்யா குற்றம்சாட்டியுள்ளது.
1987 ஆம் ஆண்டு பனிப்போர் காலத்தில் அமெரிக்கா சோவித் ரஸ்யா இடையே அணுசகத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இருநாடுகளும் தரையில் இருந்தும் குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை பரிசோதிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ரஷியா இந்த ஒப்பந்தத்தை மீறி, ஏவுகணைகளை சோதிப்பதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா கடந்த மாதம் ரஷியா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை புதிய ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என சர்வதேச கண்காணிப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில், தரையில் இருந்து ஏவப்படும் நடுத்தர தூர ஏவுகணை ஒன்றை அமெரிக்கா நேற்று முன்தினம் பரிசோதித்தது.

இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கலிபோர்னியா கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை 500 கிலோ மீற்றர் தொலைவுக்கு பறந்து அதன் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அதில், “சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் இந்த சோதனையில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் பாதுகாப்பு துறையின் எதிர்கால திறன்களை மேம்படுத்தும்” எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் ஏவுகணை சோதனை “ராணுவ பதற்றத்தை அதிகரிக்கும் செயல்” என கூறி ரஷியா கண்டனம் வெளியிட்டுள்ளது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!