ஐ.தே.காவின் அதிகமான பா.மா.உறுப்பினர்கள் சஜித்துக்கு ஆதரவு

ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பெரும்பாலான, மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக, பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நாட்டிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் 123 பேரில் 97 பேர் நேற்றிரவு நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகவும், அனைவரும் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்ததாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

களநிலவரம் குறிப்பிடும் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியாத சிலரும் கட்சியில் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!