ஷவேந்திர சில்வா கடமைகளை பெறுப்போற்றுக்கொண்டார்

இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இன்று தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவரின் நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், இன்று காலை கடமைகளை பொறுப்பேற்றார்.

இதற்கு முன்னர் இராணுவத் தளபதியாக மகேஸ் சேனநாயக்க பதவி வகித்திருந்தார்.
இந்நிலையில் அவரின் பதவிக்காலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்திருந்தது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் சவேந்திர சில்வாவை, புதிய இராணுவத் தளபதியாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்தார்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு, பொறுப்புக்கூற வேண்டிய முக்கிய தளபதிகளில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில், சவேந்திர சில்வாவை புதிய இராணுவத் தளபதியாக நியமித்தமைக்கு, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கண்டனம் தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என, உள்நாட்டு மற்றும் சர்வதேச தரப்புக்களும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!