இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : தினேஸ்

புதிய நம்பிக்கையை கட்டியெழுப்பும் போராட்டத்தில், இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வவுனியா இரட்டை பெரியகுளத்தில் உள்ள விருந்தினர் விடுதியில், நேற்று தமது ஆதரவாளர்களை சந்தித்த பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள் ஏற்படுத்துவீர்களா என, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது வடக்கு மக்களுடைய கட்சியாகும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நாங்கள் தொடர்ந்து சொல்லி வந்தோம்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படுகின்ற போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் படி கூறியிருந்தோம்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவ்வாறு வாக்களிக்கவில்லை. அவ்வாறு வாக்களித்திருந்தால் அரசை வீட்டுக்கு அனுப்பியிருக்க முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர், அரசுக்கு ஆதரவாக இருந்து ஒட்சிசன் வழங்கினால், அரசிடம் இருந்து தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பினார்கள்.

அப்படி அதற்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை என்பதை, அவர்கள் இப்பொழுது விளங்கியிருப்பார்கள்.

மகிந்த ராஜபக்சவும் அவர்களுடன் இருக்கின்ற நாங்களும், நாட்டில் உள்ள எல்லா இன மக்களையும் நோக்கி கோரிக்கை விடுக்கின்றோம்.

இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம். புதிய நம்பிக்கையை கட்டியெழுப்பும் போராட்டம். இந்த வேலைத்திட்டத்தில் இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.

அவர், இவர் என்று தனியாக நாங்கள் கதவடைத்திருக்கவில்லை. எவரும் இதில் இணைந்து கொள்ள முடியும்.
நாங்கள் ஒரு புதிய நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக, வீழ்ந்து கிடக்கின்ற நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக எல்லோரும் ஒன்றிணைந்து முன்செல்வதற்கு இது அவசியமாகும். என குறிப்பிட்டுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!