வவுனியாவில், புகையிரதம் மோதியதில் கால்நடைகள் உயிரிழப்பு

வவுனியாவில் புகையிரத்தத்துடன் மோதி கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.


அந்தவகையில் இன்று வவுனியா தாண்டிக்குளத்தில் புதைகயிரதத்துடன் மோதி இரண்டு பசுக் கன்றுக்குட்டிகள் உயிரிழந்துள்ளதுடன் ஒரு கன்று காயமடைந்துள்ளது.

இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம், தண்டவாளத்தில் நின்ற மூன்று பசுக்கன்றுகளை மோதியுள்ளது.


இதன் காரணமாக இரண்டு கன்றுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒரு கன்று காயமடைந்துள்ளது.
காயமடைந்த கன்றுக்கு அப்பகுதி மக்கள் சிகிச்சை அளித்திருந்தனர்.


இதேவேளை தாண்டிக்குளம் பகுதியில் அண்மையிலும் 10 மாடுகள் புகையிரத்துடன் மோதுண்டு உயிரிழந்ததுடன், கால்நடைகள் புகையிரத்துடன் மோதுண்டு வரும் சம்பவங்கள் வவுனியாவில் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!