சட்டவிரோத மீன்பிடியில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் யாழில் ஏல விற்பனை

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றினால் அரசுடமையாக்கப்பட்ட படகுகள், இயந்திரங்கள், மற்றும் ஏனைய உபகரணங்கள் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட திணைக்களத்தில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

பொருட்களை கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் இதில் பங்குபற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
கடந்த வருட காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த படகுகள், இயந்திரங்கள் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள மீன்பிடி பரிசோதகர்கள் மூலம் கைபெற்றப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையில், குறித்த படகுகளும், இயந்திரங்களும் நீதிமன்றினால் அரசுடமையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!