உகண்டாவில் விபத்து-19 பேர் பலி

உகண்டாவில் எரிபொருள் டாங்கர் லொறி வெடித்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

உகண்டாவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற டாங்கர் லொறி விபத்துக்குள்ளாகி, வெடித்துச் சிதறியதில், 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
உகண்டாவின் ருபுரிஸி மாவட்டத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த எரிபொருள் டாங்கர் லொறி, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

இதன்போது, 2 கார்கள் மற்றும் ஒரு கடையின் மீது மோதிய குறித்த லொறி, பின்னர் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் ஏராளமான கடைகளும், வாகனங்களும் தீப்பிடித்தன. மேலும், 19 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபிரிக்க நாடுகளில் மிக மோசமான வீதிகள் மற்றும் சாரதிகளின் அதிவேகம் காரணமாக பயங்கர விபத்துகள் அடிக்கடி சம்பவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!