குருநகரில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவினை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற நபர் ஒருவர், கடற்படையினரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதான நபர் குருநகர் 4ஆம் குறுக்கு தெருவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி மூன்று லட்சம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

கைதான நபர் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!