யாழ் போதனா வைத்தியசாலையில் திருடிய இளைஞன் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக தொலைபேசிகளை திருடி வந்த இளைஞன், கண்கானிப்பு கமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு மடக்கிப்பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில், கைத்தொலைபேசிகளை திருடிய நபர் யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக, வைத்திய சாலைக்கு வருகை தருபவர்களின் கைத்தொலைபேசிகள் காணாமல் போயுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்கானிப்பு கமராக்களின் உதவியுடன் ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது சந்தேகத்திற்கு இடமான இளைஞன் ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கண்கானிப்பு கமரா ஊடாக சந்தேகத்திற்கு இடமான முறையில் அடையாளம் காணப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு வருகை தந்து, 27 ஆவது நோயாளர் விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த தாதியர் ஒருவரின் கைத்தொலைபேசியை திருட முற்பட்டவேளை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!