பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று காலை 9 மணியளவில் பளை வைத்தியசாலைக்கு முன்பாக பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் சிவரூபன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.