தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை, நல்லாட்சி அரசும் மழுங்கடித்துள்ளதாக சின்மயாமிசன் வதிவிட ஆச்சாரியார் சிதாகாசானந்தா சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் எதிர்பார்ப்புக்களை சிதைத்திருந்த விடயத்தை ஜக்கிய நாடுகள் சபையின் நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் அஹமட் சகீடிடம் எடுத்துக்கூறியதாக சின்மயா மிசன் சுவாமி சிதாகாசானந்தா தெரிவித்தார்.
ஜக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளருடனான சந்திப்பு தொடர்பில் கருத்த தெரிவித்திருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.