இந்தியாவிற்குள் ஊடுருவிய ஐ.எஸ்.ஐ.எஸ்-பாதுகாப்புப் பலப்படுத்தல்!

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த 4 பேர் இந்தியாவுக்குள் நுழைந்து பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.


இதனையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராஜஸ்தான் சிரோஹி காவல்துறை கண்காணிப்பாள் கல்யாண்மால்மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆப்கானிஸ்தான் குழு பாஸ்போர்ட்டுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் முகவர்கள் நான்கு பேர் இந்தியாவுக்குள் நுழைந்தனர் எனவும், இதன் காரணமாக ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் உச்சக்ககட்ட பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கைக் கடிதம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பொது இடங்கள், பஸ் நிலையங்கள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கடுமையான சோதனை நடத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!