கோட்டபாயவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்க தூதர் கருத்து

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பில் கருத்து தெரிவிக்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் நேற்று கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தினார்.

இதன்போது, அமெரிக்க பதிவாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, குடியுரிமை துறந்தவர்களின் பட்டியலில், பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவின் பெயர் இடம்பெறாமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது, குடியுரிமையைக கைவிடுவது ஒரு நிர்வாக செயல்முறையாகும். குடியுரிமையைக் கைவிடுவதற்கு அதற்கான படிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

எனினும் எந்தவொரு தனிப்பட்ட நபரினதும் குடியுரிமை துறப்பு தொடர்பாகவும் கருத்து வெளியிட முடியாது, அமெரிக்க சட்டங்கள் அதனை தடுக்கின்றன.

ஒருவரின் குடியுரிமை துறப்பு விடயத்தில்,அமெரிக்க பதிவாளரின் பதிவுகள் சில மாதங்கள் பிந்தியதாக இருக்கலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பதிலளித்துள்ளார்.

Recommended For You

About the Author: News Editor

error: Content is protected !!