கோட்டாவுக்கு ஆதரவு வழங்க கோரும் வரதராஜப்பெருமாள்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள், அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் எனவும், எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள், கோட்டபாய ராஜபக்சவுக்கு ஆரவு வழங்க வேண்டும் எனவும், வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார்.


இன்று, யாழ்ப்பணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள்…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்பாய ராஜபக்ச மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் இனி அக்கறை செலுத்த வேண்டியதில்லை.

ஏனெனில் போர்க் குற்றத்தில் கோத்தபாய மட்டும் ஈடுபடவில்லை. போர் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டனர் என சர்வதேசம் கூறி வருகின்றது.

ஆனால் எதோ கோத்தபாய மட்டும் தான் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான குற்றச்சாட்டே.

எனவே தமிழ் மக்கள் இவற்றை மறந்து மன்னித்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும், நாம் தமிழ்த் தேசியம், தனி நாடு என்ற விடுதலை கோரிய காலம் போய்விட்டது. இப்போது ஒரு நாட்டில் சகல இன மக்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய காலமாகும், அதனை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும்.

இங்குள்ள சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசியத்தை காத்தவர் என்றும் கோத்தபாய அதனை அழித்தவர் என்ற கருத்தை பரப்பி வருகின்றனர்.

நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக வரப்போகிறவர் தனி சிங்கள வாக்குகளினால் மட்டும் வந்தால் அது தமிழ் மக்களை பாதிக்கும். எனவே தான் நாம் ஆதரவு அதிகமாக உள்ள தரப்புக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம். ஆகவே தமிழ் மக்களின் ஆதரவு கோத்தபாயவுக்கு கிடைக்க வேண்டும்.

உண்மையிலேயே மகிந்த ராஜபக்ச தான் தேர்தலில் போட்டியிடவேண்டியவர் ஆனால் அவர் போட்டியிட முடியாத காரணத்தினால் தான் கோத்தபாய ராஜபக்கச தேர்தலில் போட்டியிடுகிறார்.

19 ஆவது திருத்த சட்டத்தின் படி இலங்கை ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தாலும் அவருக்கு அதிகாரங்கள் குறைவாகவே இருக்கும்.

அதுமட்டுமல்லாது மகிந்தவின் கட்டுப்பாட்டிலேயே கோத்தபாய எப்போதும் இருப்பார், எனவே தமிழ் மக்கள் அச்சம் இன்றி கோத்தபாயவுக்கு வாக்களிக்க முடியும். என தெரிவித்துள்ளார். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!