ஈரானிய எண்ணெய் கப்பலை, ஜிப்ரால்டர் விடுவித்தது

கடந்த ஜூலை மாதம் சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஈரான் நாட்டு எண்ணெய் கப்பலை ஜிப்ரால்டர் விடுவித்ததை அடுத்து, அந்த கப்பல் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடலின் கிழக்கு பகுதியில், அந்த கப்பல் சென்று கொண்டிருப்பதாக, கடல் கண்காணிப்பு கருவிகள் வெளியிடும் படங்கள் காண்பித்துள்ளன.

கிரேஸ்-1 என்ற பெயரில் இருந்து அட்ரியன் டார்யா-1 என பெயர் மாற்றப்பட்ட அந்த கப்பலை, மீண்டும் பிடித்து வைக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை முன்னதாக ஜிப்ரால்டர் நிராகரித்தது.

தான் தடுத்து வைத்திருந்த எண்ணெய் கப்பலை விடுவிக்கும் முடிவை ஜிப்ரால்டர் எடுத்ததை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை, தனது கடைசி நிமிட கோரிக்கையை அமெரிக்கா முன்வைத்தது.

தான் விடுவித்த கப்பல், தங்கள் நாட்டு துறைமுகத்தை விட்டு புறப்பட்ட குறித்த தகவலை இன்னமும் உறுதிபடுத்தாத ஜிப்ரால்டர், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார மற்றும் பிற தடைகள், ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி பொருந்தாது என்பதால், தன்னால் அமெரிக்காவின் புதிய ஆணையை ஏற்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.

அனுமதி இல்லாத பகுதியில், எண்ணெய் கொண்டு சென்றதாக, ஒரு மாதமாக தடுத்து வைத்திருந்த ஈரானிய எண்ணெய் கப்பலை, அமெரிக்காவின் வேண்டுகோளை மீறி, ஜிப்ரால்டர் சனிக்கிழமை விடுதலை செய்தது.

பிரிட்டன் தன்னாட்சி பகுதியான ஜிப்ரால்டரின் அதிகாரிகளிடம், கப்பலில் உள்ள எரிபொருள் சிரியாவுக்கு செல்லாது என, ஈரான் எழுத்து வடிவில் உறுதியளித்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிரேஸ்-1 எனப்படும் ஈரான் எண்ணெய் கப்பல், ஜூலை 4 அன்று பிரிட்டன் கடற்படையினரால் நிறுத்தப்பட்டது.
இந்த கப்பல் வியாழக்கிழமை வரை ஜிப்ரால்டரில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!