போர் கால ஒத்துழைப்புக்கள் மற்றும் சர்வதேச அரங்கில், இலங்கைகான ஆதரவுப் போக்கு மற்றும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் யசூசி அகாஷிக்கும் இடையில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு – 07, விஜேராம இல்லத்தில், இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஜப்பான் தூதரகத்தின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பு, நீண்ட இடைவெளிக்கு பின்னர் இடம்பெற்ற சிநேகப்பூர்வமானதும் ஆரோக்கியமானதுமான சந்திப்பென, பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் யசூசி அகாஷி இலங்கைக்கு வியஜம் மேற்கொண்டு, பலதரப்பட்ட சந்திப்புக்களில் கலந்து கொண்டுள்ளார்.