நுவரெலியாவில் விபத்து : இளைஞன் பலி

நுவரெலியாவில் இருந்து, நீர்கொழும்பு பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள், கினிகத்தேன பகுதியில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த காருடன் மோதி விபத்திற்குள்ளானதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இச் சம்பவம், இன்று காலை 11.00 மணியளவில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் இடம்பெற்றதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில், நுவரெலியா பகுதியை சேர்ந்த 22 வயதுடைய எம்.பி.அஸ்வின் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.


இந்த நிலையில், கார் சாரதி ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாளை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


சம்பவம் தொடர்பில், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!