மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் வவுனியாவில் ஊடக சந்திப்பு !

வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பவர்களுக்கே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கப்படும் என, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தில் அங்கம் வகிக்கும் மீனவ சமாசங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் இணையமும் இணைந்து, வவுனியாவில் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஊடக சந்திப்பில், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மற்றும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஆலம், கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்ட மீனவ சமாசங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய முல்லைதீவு மாவட்ட மீனவ சமாசங்களின் தலைவர்கள்.

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நாம் பல போராட்டங்கள் முன்னெடுத்து வந்தாலும்,
இன்றும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் சமுகமாகவே காணப்படுகிறோம்.

யுத்தத்தின் முன், மீனவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் யுத்தத்தின் பின் அவர்களின் வாழ்கைக்கும் இடையில், அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா என்றால், அது கேள்விக்குறியாகவே உள்ளது.

வட பகுதி கடல் இலங்கையர்; அனைவருக்கும் செந்தம் என கூறும் அரசு, வடபகுதி மீனவர்களின் வாழ்கையை உயர்த்தாமல் தான்தோன்றி தனமாக செயற்படடடு வருகிறது. இன்று கடலின் மீன்களை விட மீனவர்களே அதிகம் காணப்படுகின்றனர்.

இந்திய தமிழக மீனவர்களின் அத்துமீறிய வருகையால், வடபகுதி கடல் வளம் முற்றுமுழுவதாக அழிவடைந்து வருகிறது.

தமிழக மீனவர்களின் வருகையையும், தென்பகுதி மீனவர்களின் வருகையையும் கண்டித்து, நாம் பல போராட்டங்கள் முன்னெடுத்தும் எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. பல சட்டங்களை கொண்டுவந்தாலும்,
அவை வெறுமனே புத்தக வடிவில் மட்டுமே காணப்படுகிறது.

எமது மக்கள் பிரதிநிதிகள் கூட, இதைப்பற்றி பேச தயாராக இல்லை. அவர்களுக்கு இந்த பிரச்சினை
தெரியுமோ இல்லையோ என்று கூட எமக்கு தெரியவில்லை.

இன்று தேர்தல் காலங்களில், தமது வாக்குவங்கியை நிரப்பிக் கொள்வதற்காக சட்டவிரோத மீனபிடியை
ஊக்குவித்து விடுவார்களோ என்ற பயம் தான் எம் மத்தியில் காணப்படுகிறது.

ஏற்கனவே பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த சமுகம் என்ற ரீதியில், மீனவர்கள் நாம்சுயமாக சிந்தித்து
வாக்களிக்கவுள்ளோம்.

தேர்தல் காலத்தில், மீனவர்களாகிய எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஒருவருக்கே எமது சமூகம் வாக்களிக்கும்.

முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கில், தென்பகுதி மீனவர்களின் வருகையானது பெரும் பிரச்சினையாக
காணப்படுகிறது.

இவ்வாறான செயற்பாட்டினால் வட பகுதில் உள்ள 20,000 குடும்பங்கள் 100,000 மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

கரைவலை பயன்பாடு என்பது, சாதாரணமாக கையை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு முறை. ஆனால் இன்று அவை ரக்ரர் மூலம் செய்யப்படுகிறது. இதனால் கடலில் உள்ள மீன் வங்கி பாதிக்கப்படுகிறது.

சிலின்டர் மூலம் மீன்பிடியில் ஈடுபடுதல். இதனால் ஏற்படும் அதிர்வு காரணமாக, கரையை நோக்கிய மீன்களின் வருகை இப்போது இல்லாமல் போகிறது.

நாயாற்றில் கிட்டத்தட்ட 400 நிரந்தர வாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தென்னிலங்;கை மீனவர்களுக்கு, தென்னிலங்கையில் 6 மாத மீன்பிடியும் வட பகுதியல் 6 மாதமுமாக வருடம் முழுவதும் மீன்பிடிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதனால் இங்குள்ள மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது.

பாராளுமன்றத்தில் சுமந்திரனின் தனிப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 2017 ஆம் ஆண்டு இழுவை மடிகளுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இப்போதும் இவை நடைமுறையில் உள்ளன. சிலரின் அரசியல் இலாபத்திற்காக சட்டமாக்கப்பட்ட ஒன்று நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது.

மத்திய அரசாங்கம் தான் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். ஆனால் மத்திய அரசாங்கம் கூட இதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது.

தென்னிலங்கை மீனவர்களின் வருகை இப்படியே நிகழ்ந்து கொண்டு இருந்தால் காலப்போக்கில் இனங்களுக்கு இடையிலான வன்முறைகள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் .

இந்த அரசாங்கம் மக்களுக்கான காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கையை எடுக்கவேண்டும்
அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பாராளுமன்ற தேர்தலிலும் ஜனாதிபதி தேர்தலிலும்
மீனவ சமுகம் சரியான பாடத்தை கற்பிக்கும்.

கடந்த மாதத்தில் யாழில் பாராளுமன்ற உறுப்பினர்களை வட்டமேசை கலந்துரையாடலுக்கு அழைத்தோம்
ஆனால் அர்கள் அதில் சமுகமளிக்கவில்லை. மீண்டும் இம்மாதம் 31 ஆம் திகதி மீண்டும் ஒரு கலந்துரையாடலுக்கு யாழ்ப்பாணம் நூகத்திற்கு அழைத்துள்ளோம். என குறிப்பிட்டார்.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!