மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள அலுவலகங்கள் பாடசாலைகளின் அலுவலக சிற்றுளியர்களுக்கான 10 நாள் செயலமர்வு இன்று ஆரம்பமானது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் நடைபெற்றுவரும் இச் செயலமர்வில் சிற்றுளியர்களின் கடமைகள் பொறுப்புக்கள் பற்றிய விடயம், கணக்கு விடயம், நிர்வாக கட்டமைப்பு விடயம் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இச் செயலமர்வு இன்று தொடக்கம் 10 நாட்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(007)