மட்டு, பார் வீதியின் முதலாம் குறுக்கு வீதி புனரமைப்பு

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு தாமரைக்கேணி கிராம சேவை பிரிவில் உள்ள மட்டக்களப்பு பார் வீதியின் முதலாம் குறுக்கு வீதியினை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


மட்டக்களப்பு மாநகர சபையின் 10 ஆம் வட்டார உறுப்பினர் சிவம் பாக்கியநாதனால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரனின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த வீதியினை கொங்ரீட் வீதியாக புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையுடன் அரசடி சனசமூக நிலையம் இணைந்து மட்டக்களப்பு தாமரைக்கேணி கிராம சேவை பிரிவில் உள்ள மட்டக்களப்பு பார் வீதியின் முதலாம் குறுக்கு வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்தினை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் மாநகர சபை பொறியிளாளர் சித்திரா தேவி லிங்கேஸ்வரன், மாநகர சபை தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.ராஜகுமார், மாநகர சபை உறுப்பினர்களான, சிவம் பாக்கியநாதன், டி.மதம், எஸ்.சந்திரகுமார் ஆகியோர் இணைந்து வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

வட கிழக்கினை பிரிப்பதற்கு நீதிமன்றம் சென்றவர்கள், இந்த மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!