மட்டு, நொச்சிமுனையில், ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு நொச்சிமுனை பிரதேசத்தில், வீடொன்றிலிருந்து ஆணின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.


இசை நடனக் கல்லூரிக்கு பின்னாலுள்ள வீதியின் இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள வீடொன்றிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் 62 வயதுடைய இராசமாணிக்கம் ராமநாதன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் குறித்த வீட்டில் தனித்து வசித்து வந்த நிலையில் இவரோடு கூலித் தொழில் புரியும் நண்பர் ஒருவர் இவரைத் தேடி இன்று காலை இவரது வீட்டுக்கு சென்ற போது இவர் சடலமாக கிடப்பதை கண்டுள்ளார்.

இதனையடுத்து அயலவர்களுக்கு அறிவித்ததையடுத்து அயலவர்கள் குறித்த பகுதியின் கிராம உத்தியோகத்தருக்கும் காத்தான்குடி பொலிசாருக்கும் அறிவித்துள்ளனர்.

ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் சடலத்தை மீட்டதுடன் ஆரம்பக்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

குறித்த வீட்டுக்கு மட்டக்களப்பு குற்றதடவியல் பொலிஸ் அதிகாரிகளும் சென்று தடவியல் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.

இது தொடர்பில் தொடர்ந்து காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!