யாழ். வடமராட்சியில், 60 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சியில், 60 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.


யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, இன்று காலை மண்டான் கிராய் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 60 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 48 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை கஞ்சா கடத்தப்பட இருந்த நிலையில், நெல்லியடி பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினரும், யாழ்ப்பாண விசேட அதிரடிப் படையினரும் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து, சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!