வவுனியாவில், நூலகம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு

வவுனியா கள்ளிகுளம் மாமடு கருங்காலிக்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில்இ சிறி சபாரத்தினம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில்இ நூலகம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுஇ பாடசாலை வளாகத்தில்இ இன்று இடம்பெற்றது.

போரால் பல பாதிப்புக்களை சந்தித்த மக்கள் மீள்குடியேறியுள்ள பகுதியில்இ மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் நோக்குடன் 3 இலட்சம் ரூபா செலவில் நூலகம் அமைக்கபடவுள்ளதாகஇ சிறி சபாரத்தினம் அறக்கட்டளையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்இ சிறி சபாரத்தினம் அறக்கட்டளையின் சர்வதேச இணைப்பாளர் எ.நித்தியானந்தன்இ இலங்கைக்கான தலைவர் கென்றி மகேந்திரன்இ ஆலோசகர் சபாநாதன்இ மாணவர்கள்இ ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!