அம்பாறை மாவட்டத்தில் நீண்ட வரட்சிக்கு பின் கடந்த ஓரிரு தினங்களாக மாலை வேளைகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையிலும், குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் தொடர்ந்தும் அவதியுற்ற வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடத்தில் போதிய மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாத காரணத்தால், நீரேந்தும் இடங்களில் நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தால் பாரிய வரட்சி ஏற்படவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு இருந்தன.
இந்நிலையில் குறிப்பாக திருக்கோவில் பிரதேசத்தில் சாகாமம் குளத்தில் நீர் இல்லாகாரணத்தினால் சுமார் 17ஆயிரம் மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாரிய பிரச்சினைக்கு உள்ளாகி வருவதுடன் கஞ்சிகுடியாறு, றூபஸ் உட்பட 30க்கும் மேற்பட்ட சிறிய குளங்களிலும் நீரில்லாது வறண்டு காணப்படுகின்றன.
இதேவேளை வரட்சி காரணமாக விவசாயிகளின் நெற் செய்கைகள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் பதிக்கப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நெல்வயல்கள் கைவிடப்பட்ட இருந்ததுடன் கால்நடைகளும் நீருக்காக அவதியுற்ற வருவதை அவதானிக் கூடியதாக இருக்கின்றன.
இந்நிலை திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டானைச்சேனை, பொத்துவில் போன்ற பிரதேசங்களில் நேற்று முதல் ஓரளவு மழை பெய்ந்து வருகின்ற போதிலும் நீண்ட நாள் வரட்சியை போக்கக் கூடிய வகையில் மழை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.(நி)