மட்டக்களப்பில் உதைபந்தாட்ட போட்டி!

மட்டக்களப்பில் 15வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கோல்ட்பீஸ் அணி வெற்றிபெற்றது.

சிறுவர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையை முன்னேற்றுவதற்காகவும் எதிர்கால சிறுவர்களின் ஆளுமைய வெளிக்கொண்டுவரும் முகமாகவும் நேற்று மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் 15 வயதுக்கு உட்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது.

கோல்ட்பீஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு 07 பேர் கொண்ட விலகல் முறையிலான சுற்றுப்போட்டியில் போட்டியில் 10 அணிகள் பலப்பரீட்சையில் விளையாடியது.

நேற்று மாலை மட்டக்களப்பு திராய்மடு கோல்ட் பிஷ் விளையாட்டுக் கழகமும் மட்டக்களப்பு பாலமீன் லைட் ஹவுஸ் விளையாட்டு கழகமும் இறுதிப்போட்டியில் மோதியது.

இந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளும் கோல்களைப்பெற்றுக்கொள்ளாத நிலையில் தண்டனை உதைமூலம் கோல்ட் ஃபிஷ் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இறுதிப்போட்டியை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு கோல்ட் ஃபிஷ் விளையாட்டு கழகத்தலைவர் லோகிதராஜா ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றி கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!