கதிர்காமத்திற்கு படையெடுக்கும் பக்தர்கள்!

கதிர்காம கந்தனின் ஆடி வேல் திருவிழா நிறைபெற்ற போதிலும், கதிர்காமம் நோக்கிச்செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான கதிர்காம கந்தனின் ஆடி வேல் பெருவிழா கடந்த மாதம் நடைபெற்றது.

இந்த ஆடி வேல் திருவிழாவினை காண்பதற்கு இலங்கையின் நாலா பாகங்களிலிருந்து பெருந்திரளான பக்தர்கள் கதிர்காமத்தினை நோக்கி படையெடுத்திருந்தனர்.

எனினும் தற்போது பாடசாலை விடுமுறை காலம் என்பதால் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக பெருந்தொகையான பக்தர்கள் கதிர்காமத்தினை நோக்கிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

திருவிழா காலங்களைப் போல் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக நீண்ட வரிசை காணப்படுவதுடன், பக்தர்கள் தமது நேற்றிக்கடன்களையும் நிறைவேற்றி வருகின்றனர்.

கதிர்காமப்பகுதிக்கு அதிகளவு மக்கள் செல்வதால், அப்பகுதியில் நெருக்கம் காணப்படுகின்றது.

இதனால், குறித்த பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் பலப்படுத்தியுள்ளனர்.

அதிகமாக மக்கள் கதிர்காமப் பகுதியில் நடமாடுவதனால் வர்த்தக நடவடிக்கைளும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!