நல்லைக்குமரன் 27ஆவது நூல் வெளியீடு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சைவசமய விவகார குழுவினால் வெளியிடப்படும் நல்லைக்குமரன் நூலின், 27  ஆவது நூல் இன்று வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், வாழ்நாள்  பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளைக்கு இவ்வருடத்திற்கான யாழ்.விருதும், பொற்கிளியும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதேவேளை, வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை தனக்கு இன்று வழங்கப்பட்ட பொற்கிளியை, யாழ்ப்பாணம் மாநரக சபையின் இந்து சமய விவகார குழுவினரிடம் ஒப்படைத்தார்.

நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவல் ஆர்னோல்ட் கலந்து கொண்டதுடன், சாதனைத் தமிழன் கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ்ப்பாணப் பிரதேச செயலர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!