மனைவி உயிரிழந்ததை தாங்க முடியாது மனச்சோர்வுற்றிருந்த முதியவர், நஞ்சருந்திய நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோண்டாவில் காரைக்கால் பகுதியில் வதியும் 63 வயதுடைய கந்தையா ஜெனபாலசிங்கம் என்ற முதியவரே இவ்வாறு நஞ்சருந்தி உயிரிழந்தவராவர்.
நேற்று அதிகாலை, முதியவர் நஞ்சருந்தியதை அறிந்த மகள், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறப்பு விசாரணைகள்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட பின்னர், உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.