எதிர்கால சந்ததியினரை மனதில் வைத்து சிறந்த தலைவரை உருவாக்க வேண்டும் – சபாநாயகர்

எமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு எவ்வாறு இருந்ததோ அந்த நிலமைக்கே மீண்டும் நாடு தள்ளபட்டுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நுவரெலியா இராவணாகொட பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘எமது நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் எமது நாடும், ஜப்பான் நாடும் ஒரே தரவரிசையில் கானபட்டன. ஆனால் எமது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண
சூழ்நிலைகள் காரனமாக ஜப்பான் நாடு முன்னிலையில் இருக்கின்றது. எமது நாடு சுதந்திரம் அடைந்து இன்று எழுபது வருடங்கள் கடந்துள்ளன.
எமது அனைவருக்கும் இந்த நாட்டில் உரிமைகள் உள்ளது. ஆனால் எமது உரிமைகளை நாம் புறம் வைத்துவிட்டு, இந்த நாட்டுக்கு ஒரு சிறந்த  தலைவர் தேவைப்படுகின்றார்,  எனவே ஒரு சிறந்த தலைவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் .

நமது நாடு தற்பொழுது சுதந்திரம் அடைவதற்கு முன்பு எவ்வாறு இருந்ததோ அதே நிலமைக்கு மீண்டும் தள்ளபட்டுள்ளது இதனை நான் மனவேதனையோடு கூறுகிறேன் இதற்கு காரணம் நமது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சம்பவங்களே.இந்த நாட்டில் தீவிரவாதம் உருவாகியது, இனவாதம் உருவாகியது. இதனால் எமது நாடு பெரும் பாதிப்புக்குள் தள்ளப்பட்டது.
நாட்டின் எதிர்கால சந்ததியினரின், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் எமது நாட்டை நாம் பழைய நிலமைக்கு கொண்டு செல்ல வேண்டியது அனைவரினதும் முக்கிய கடப்பாடாக அமைந்துள்ளது

இந்த உலகத்தில் இருப்பது ஒரே ஜாதி அதுதான் மனித ஜாதி. இந்த நாட்டில் கத்தி தடியினை எடுத்து கொண்டு பழிவாங்க முடியாது, தீ வைக்கமுடியாது.
எனவே எவருடைய உயிரையும் பறிக்கும் அதிகாரம் எமக்கு கிடையாது.  இந்த நாடு ஒரு பௌத்தநாடு என்பதனை மனதில் வைத்து கொண்டு நாம் அனைவரும் ஜாதி,மதம் இனவாதங்களை மறந்து ஒன்றிணைந்து வாழவேண்டும்” எனவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நுவரெலியா இராவணாகொட விகாரையின் பிரதான தேரர் காத்தேவல சந்திரஜோதி தேரரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சபாநாயகர் கரு ஜெயசூரிய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன், கொத்மலை பிரதேசசபையின் தலைவர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!