நல்லிணக்கம் தொடர்பில் மன்னாரில் செயலமர்வு!

தொடர்பாடலுக்கான பயிற்சிமையத்தின் ஏற்பாட்டில், இலங்கையில் போருக்குப் பின்னரான நல்லிணக்க செயல்முறைகளை சக்திமயப்படுத்தல் எனும் தொனிப் பொருளில், மன்னார் மாவட்டத்தில் கிராம ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் சிறப்பாக செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான இருநாள் செயலமர்வு நேற்று நிறைவடைந்தது.

மன்னார் கிராமிய அபிவிருத்தி நிறுவன கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை குறித்த செயலமர்வு ஆரம்பமாகியிருந்தது.
தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் மன்னார் செயற்திட்ட அலுவலர் எஸ்.ஜோண்சன் தலைமையில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.
குறித்த செயலமர்வில்; இன மதரீதியான முரண்பாடுகளை வன்முறையற்ற தொடர்பாடல் மூலம் சீர் செய்வது தொடர்பாகவும், மொழிசார் உணர்வுசார் விடயங்களினால் இனங்கள் மதங்கள் மத்தியில் பரஸ்பரபுரிந்துணர்வும் ஏனையவர்கள் மட்டில் அவர்களின் உணர்வு தேவைகளை கண்டறிந்து செயல்படுதல் தொடர்பாகவும், வன்முறையற்ற தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் விரிவுரையாளரும் மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட முகாமையாளருமான பெனிக்னஸ் மூலமாக விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் இளையோர் யுவதிகள் உட்பட சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செயலமர்வின் மூலம் பயிற்சிபெற்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து மாவட்ட ரீதியில் செயற்படக் கூடிய சிவில் அமைப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!