நாட்டின் வருமானம் 100 வீதமாக மாற்றப்பட்டுள்ளது-பிரதமர்

ஆட்சிக்கு வரும்போது நாட்டின் வருமானம் 50 வீதமாக காணப்பட்ட நிலையில் அதனை தற்போது 100 வீதமாக அதிகரிக்கச் செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த ஆட்சி புதிய ஆட்சியாகும். ஆரம்பத்தில் இந்த ஆட்சிக்கு நாடளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் கிடைக்கப்பெற்ற சிறுபான்மையை வைத்தே ஆட்சியைக் கொண்டுசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த ஆட்சியைக் கொண்டுசெல்ல முடியுமா என என்னிடம் வினவினார்கள். எவ்வாறாயினும் இந்த ஆட்சியை அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை கொண்டு செல்ல முடியும் என்ற தீர்மானத்தின் அடிப்படையிலேயே அதனை முன்னெடுத்தோம்.

இவ்வாறான இக்கட்டானதொரு சூழலில் வேறு எந்த அரசாங்கத்துக்கும் இயலாத ஒன்றை நாம் செய்து அதில் வெற்றியையும் பெற்றிருக்கின்றோம்.

எமது வருமானத்தைக் காட்டிலும் செலவீனம் அதிகமாகும். இதனால் எமது ஆட்சிக்காலத்தின் முதல் இரண்டு வருடங்களில் எம்மை மக்கள் தூற்றினார்கள் என்பதை அறிந்திருந்தேன்.

அந்தக் காலப்பகுதியில் நாம் பொருளாதார அபிவிருத்தியில் ஓர் ஸ்த்திரத்தன்மையை ஏற்படுத்தினோம்.

அதன் காரணமாகவே தற்போது நூற்றுக்கு 50 வீதமாக காணப்பட்ட வருமானம் 100 வீதமாக அதிகரித்திருக்கிறது’ என பிரதமர் தெரிவித்துள்ளார்.(நி)

 

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!