பங்களாதேஷில் இடம்பெற்ற கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் தங்களுடைய உடமைகளை இழந்துள்ளனர்
அந்த நாட்டில் தலை நகர் டாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் சலந்திகா என்னும் இடத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு இருந்த 1500-க்கும் மேற்பட்ட குடிசைவீடுகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ள்ளன
குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது
பல வீடுகளில் மேற்கூரைகள் பிளாஸ்டிக் அமைக்கப்பட்டிருந்ததால், தீ வேகமாக அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது
மக்கள் தீயை அணைக்க முயான்ற போதும் முடியாமல் போயுள்ளது பின்னர்
சம்பவம் அறிந்து குறித்த இடத்திற்கு இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், சுமார் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் முழுமையாக எரிந்துள்ளான.
ஹஜ்ஜுப் பெருநாளை ஒட்டி பலர் வெளியூர் சென்றதன் காரணமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.(சே)