ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி அறிவிக்கும் வேட்பாளருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியாகவா அல்லது மலையக மக்கள் முன்னணியாகவா ஆதரவளிப்பது என்பதை கூடிப் பேசி தீர்மானிக்கவுள்ளதாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ம் திகதி தமிழ் முற்போக்கு கூட்டணியின் கூட்டம் நடைபெறவிருக்கின்றது. அதில் சில முடிவுகள் எடுக்கப்படும் அதன் பின்னராகவே எதனையும் தம்மால் கூறமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வட்டவலை- மவுன்ஜின் தோட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். (மு)