முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து இலக்குகளையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 5 இலக்குகளையும், சுரங்க லக்மால் 4 இலக்குகளையும் கைப்பற்றி இருந்தனர்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து இலக்குகளையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் இலங்கை அணி நியூசிலாந்து அணியை விட முதல் இன்னிங்ஸில் 18 ஓட்டங்கள் முன்னிலை வகித்து.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் அஜாச் பட்டேல் 89 ஓட்டங்களுக்கு 5 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி அனைத்து இலக்குகளையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் அம்புல்தெனிய 4 இலக்குகளையும், தனஞ்சய டி சில்வா 3 இலக்குகளையும், லஹிரு குமார 2 இலக்குகளையும் கைப்பற்றி இருந்தனர்.

இந்நிலையில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 267 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 4 இலக்குகளை இழந்து 268 ஓட்டகளை பெற்று முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் காலி மைதானத்தில் அதிகபட்ச இலக்கினை அடைந்து வெற்றிபெற்ற அணி என்ற பெருமையை இலங்கை அணி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தனது 9 ஆவது டெஸ்ட் சதத்துடன் 122 ஓட்டகளையும் லஹிரு திரிமன்ன 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!