சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய செல்ல முற்பட்டோர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் -தொடுவாய் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் மட்டக்களப்பு பாசிக்குடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஏனய இருவரும் சிலாபம் தொடுவாய் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் தாம் மீன்பிடிப்பதற்காகவே அப்பகுதியில் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!