தெரிவுக்குழு நாளை மறுதினம் மீண்டும் கூடவுள்ளது!

 

உயிர்த்தஞாயிறு அன்று இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு அமர்வு மீண்டும் நாளை மறுதினம் கூடவுள்ளது.

நாளை மறுதினம் பிற்பகல் 3.30 மணியளவில் தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் வகையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூன்று பேரடங்கிய குழுவின் உறுப்பினர்கள் சாட்சியமளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, அமைச்சு ஒன்றின் செயலாளராக பதவி வகித்த பத்மசிறி ஜயமான்ன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் ஆகியோர் சாட்சியம் வழங்கவுள்ளனர்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்டோர் இதுவரையில் சாட்சியம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!