சட்டவிரோத மதுவிற்பனை முறையிட அவசர தொலைபேசி 1913

சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோர், மதுபானத்தினை கைவசம் வைத்திருப்போர் தொடர்பில் பொதுமக்கள் தகவலினை வழங்குவதற்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றினை மதுவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

1913 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நாளை முதல் பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். அவர்களின் தகவலுக்கு ஏற்ப சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கு மதுவரித் திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது. தகவல் வழங்குபவரின் விபரங்கள் இரகசியம் பேணப்படும் என மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!