ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இடம்பெற்ற, திருமண நிகழ்வில் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 63 பேர் உயிரிழந்துள்ளதுடன் 180க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த குண்டுத் தாக்குதலானது தற்கொலை குண்டுதாரியால் நிகழ்த்தப்பட்டதாக குண்டுத் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரவித்துள்ளனர்.
குண்டுத் தாக்குதல் இடம்பெற்று சில மணி நேரங்களுக்கு பின்னர், குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை ஆப்கான் உள்நாட்டு அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
இந்த குண்டுத் தாக்குதலுக்கும் தமது அமைப்பிற்கும் எதுவித தொடர்பும் இல்லை என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ள அதேவேளை, எந்தவொரு அமைப்பும் தாக்குதலுக்கு பொறுப்பேற்றவில்லை.(நி)