மன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படுகின்றது!

மன்னார் நகரசபைக்குற்பட்ட எழுத்தூர் பகுதியில் காணப்படும் குளத்தை ஆழப்படுத்தப்படும் நடவடிக்கைகளில் மன்னார் நகர சபை ஈடுபட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியை அடுத்து மன்னாரில் உள்ள குளங்கள் மற்றும் நீர் நிலைகள் வற்றியுள்ளன.

இந்நிலையில் மன்னார் நகர சபைக்குற்பட்ட மக்களின் பயன்பாட்டில் காணப்பட்ட எழுத்தூர் குளமும் முழுமையாக வற்றியுள்ளது.

இந்நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனின் பணிப்புரைக்கு அமைவாக நகர சபை உறுப்பினர் மனோ ஐங்கர சர்மா தலைமையில் எழுத்தூர் குளம் அகலப்படுத்தப்பட்டும் ஆழப்படுத்தப்படும் வருகின்றது.

குறித்த குளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் மண், மன்னார் நகர சபைக்குட்பட்ட சேதமடைந்த வீதிகளின் புனரமைற்பிற்கு பயன்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!