நிந்தவூரில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை தேவை!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருவதாகவும், அதனை தடுக்க இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும், தற்போது தற்காலிகமாக கடல் அரிப்பை தடுக்க கடற்கரை பகுதியில் மண் மூட்டைகளினால் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அவர்களின் வாடிகளை வேறு பிரதேசங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்குறுதி வழங்கியதாக தெரிவித்த மீனவர்கள், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடல் அரிப்பினால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள உயர் அதிகாரிகள், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கடல் அரிப்பு பிரதேசத்தினை நேரில் சென்று பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!