பேராயர் மெல்கம் ரஞ்சித்திடம் ஆசி பெறுகின்றார் கோட்டபாய

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை இன்று சந்தித்து ஆசிபெறவுள்ளார்.

அதேவேளை கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் தம்மாலங்கார தேரரையும், அமரபுர நிக்காயவின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரையும் சந்தித்து ஆசிபெறவுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டபாய ராஜபக்ச இந்துக் கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிகள், மற்றும் விகாரைகளுக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, அவ்வவ்மதங்களின் தலைவர்களிடத்தில் ஆசிகளை பெற்றும் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!