டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி நீண்ட காலமாக உடல்நலக்குறைவு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த வருடம் மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பின் அரசியலில் இருந்து விலகிக்கொண்டார்.
இதேவேளை, கடந்த 9ஆம் திகதி மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் இது பற்றி உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.(நி)