மக்களின் பெரு வரவேற்புடன் கோட்டபாய மெதமுலன சென்றார்!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு அளித்த ஆதரவினை, தனக்கும் மக்கள் தரவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது பிறந்த இடமாக, வீரகெடிய-மெதமுலன பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மஹிவா சே விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர்,பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு சென்றிருந்த கோட்டபாய ராஜபக்ச,அங்கு கருத்து வெளியிடும்போதே எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், சகோதரருமான மஹிந்த ராஜபக்சவிற்கு மக்கள் வழங்கி ஆதரவினை தனக்கும் மக்கள் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மெதமுனயிலுள்ள தனது பெற்றோரின் நினைவிடத்திற்கு சென்ற கோட்டபாய ராஜபக்ச,அங்கு மலரஞ்சலி செலுத்தினார்.

கோட்டபாய ராஜபக்ச தனது சொந்த இடத்திற்கு சென்றபோது, பெருமளவான பிக்குகளும்,பிரதேச மக்களும் திரண்டு வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!