யாழ்- கிளிநொச்சியில் 75மி.மீ மழை பெய்யும்

வடக்கு-கிழக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மாகாணங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடையிடையே மழை பெய்யும் எனவும், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தளை மாவட்டங்களிலும் ஓரளவான மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான பலத்த மழை வீழ்ச்சி காணப்படும் என தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் அளவான ஓரளவு மழை வீழ்ச்சி காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!