ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? இன்று அறிவிப்பு.

2020ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்ததலில் போட்டியிடும் தமது கட்சியின் வேட்பாளரை மக்கள் விடுதலை முன்னணி இன்றயதினம் அறிக்கவுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெறும் நிகழ்வில் 28 பொது அமைப்புக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக தமது அணியில் அரசியலில் இருக்கின்ற ஒருவரும் நாட்டு மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்த ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக இன்று தமது கட்சி அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

1999ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளரான எம்.டி.நந்தன குணதிலக்க போட்டியிட்டு 344173 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தினை பெற்றிருந்தார். 20 வருடங்களின் பின்னர் மீண்டும் மக்கள் விடுதலை முன்னணி தனியாக தமது கட்சியின் வேட்பாளரினை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!