நுவரெலியாவில் விபத்து : இருவர் பலி

கந்தப்பளை பொலிஸிஸ் பிரிவுக்குட்பட்ட எஸ்கடேல் தோட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலப்பனை – மந்தாரநுவர – எலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கணவன், மனைவியான 50 வயதுடைய டி.பி.ரூபசிங்ஹ, 45 வயதுடைய ரோஹினி குமாரி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் இவர்களின் பிள்ளைகள் என்பது பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எலமுல்லை பிரதேசத்திலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியில் தாய், தந்தை, 06 வயது சிறுவன் 16,19 வயதுடைய சிறுமிகள் பயணித்துள்ளனர்.

தந்தை முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த நிலையில், கந்தப்பளை எஸ்கடேல் ‘ஐஸ் பீலி’ என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!