சஜித்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் கவனயீர்ப்பு நடைபவனி

வீடமைப்பு நிர்மானத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேம தாசாவை ஜனாதிபதி வேட்பாளாராக நிறுத்த கோரி அரசியல் தலைமைகளுக்கு அழுத்தம் தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பில் கவனயீர்ப்பு நடைபவனி இன்று நடைபெற்றது.

2020 மட்டக்களப்பு மாவட்ட சஜித் பிரேமாதாச தலைமுறை அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் தலைவர் எம்.ஜெகவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு நடைபவனி, மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுர அருகில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு கல்லடி பாலம் ஊடாக மட்டக்களப்பு அரசடி சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் மட்டக்களப்பு கல்லடி ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் வரை நடைபெற்றது.

இந்த கவனயீர்ப்பு நடைபவனியில் வீடமைப்பு நிர்மானத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரின் ஊடக இணைப்பாளர் துமிந்த அமரகோன், அம்பாந்தோட்டை சூரியவௌ பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் சுபக பிரதீப் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். (007)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!